ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரத்தில் உள்ள தொழிற்கூடங்களில் வேலை செய்த குழந் தை தொழிலாளர்களை போலீசார் அதிரடியாக சோத னை செய்து அவர்களை மீட்டுள்ளனர்.சத்வார் கொத் வாலி, சுர்சாகர், பிரதாப் நகர்களில் இருக்கும் போலீ ஸ் நிலையங்களுக்கு இந்த இடங்களில் இருக்கும் தொழிற்கூடங்களில் குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவதாக புகார்கள் வந்தன. இ ந்த புகார்களின் அடிப்படையில் ஜோத்பூரில் உள்ள
கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கூடங்களில் திடீர் சோதனை நடத்தினார் கள்.
கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கூடங்களில் திடீர் சோதனை நடத்தினார் கள்.
இந்த சோதனையில் சிறுவர்களை சட்டவிரோதமான முறையில் பணிக்கமர்த்திய 8 உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு சிறுவர்களை சப்ளை செய்த 12 புரோக்கர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
60 சிறுவர், சிறுமிகளை மீட்ட போலீசார், அவர்களை பால் கல்யாண் சமிதியில் ஒப்படைத்துள்ளனர்.மேலும் இது போன்ற அதிரடி சோதனைகள் அடிக்கடி நடாத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது, இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான குழந்தை தொழிலாளர்களை கரை சேர்ப்பதற்கு இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி நடக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக