பாரிஸ்:முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற மார்க்க அறிஞரான டாக்டர்.யூசுப் அல் கர்ளாவி பிரான்சில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி தடை விதித்துள்ளார். இதன் மூலம் சர்கோசி தனது ‘இஸ்லாமோபோபியாவை’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.86 வயதுடைய கர்ளாவி எகிப்தில் பிறத்தவர். இவர் அடுத்த மாதம் பிரான்சில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதாக இருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் சர்கோசி கர்ளாவி பிரெஞ்சு குடியரசிற்கு வரவேற்கப்படவில்லை என்று தான் கத்தாரின் தலைமையிடம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் வானொலியில் கூறியுள்ளார்.கர்ளாவி அல்-ஜஸீரா தொலைக்காட்சியில் துனிசியா, எகிப்து மற்றும் லிபியாவில் ஏற்பட்டுள்ள அரபு வசந்தம் குறித்து பிரபல நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். மேலும் சிரியாவில் ஏற்பட்டு வரும் போராட்டத்திற்கு நிதி திரட்டும் பணியையும் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக வருகின்ற ஏப்ரல் 6_ஆம் தேதி எகிப்தின் பிரபல பிரச்சாரகரான மஹ்மூத் அல்-மஸ்ரியுடன் இணைந்து பிரான்சின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று நடத்தும் நிகழ்ச்சியில் பங்குபெற இருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்திருப்பது வருகின்ற ஆண்டில் பிரான்சில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் வலது சிந்தனை உள்ள பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபமாக சர்கோசி மறுபடியும் அதிபர் பதவியை பிடிக்க ‘இஸ்லாமோபோபியா’ என்னும் வலது சிந்தனையை கையில் எடுத்துள்ளார் என்று துர்கியின் பிரதமர் எர்துகான் கூறியிருந்தது நினைவுக் கூறத்தக்கது.
நன்றி: தூது ஆன்லைன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக