7 பேரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டின் கீழ் சுற்றிவ ளைப்பின் போது படுகொலை செய்யப்பட்டபிரான்ஸ் இளைஞர் மெரா மொஹ்மட்,பதிவு செய்திருந்த வீடி யோ ஒன்று அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு கிடைத்து ள்ளதாக காவற்துறை தகவல்களை மேற்கோள் காட் டி La parisien daily தகவல் வெளியிட்டுள்ளது. காவற்து றையினரால் மெராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒ ரு மெமரி ஸ்டிக்கில் வீடியோ காட்சிகள் அடங்கியி ருப்பதாகவும் எனினும் அது காவற்துறையினரின் கைகளுக்கு சென்றடைய முன்னர்
அல் ஜசீராவுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரி விக்கப்படுகிறது.இதேவேளை மெராவின் மூதாதையர்கள் அல்ஜீரியாவில் இருப்பதால், அவரது உடலை அங்கு தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என மெராவின் தந்தையார் கோரியுள்ளார். இதற்காக சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தேர்தலை சந்திக்கவுள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஸி, நாட்டில் மேலும் 'மெரா'க்கள் இருக்கிறார்களா என்பதனை தீவரமாக கண்காணித்து வருவதாகவும் இதற்காக புலனாய்வு துறையினருக்கு விசேட கட்டளையிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 3 யூத மாணவர்கள் உட்பட 7 பேரை அடுத்தடுத்து ஒரு வாரத்திற்குள் சுட்டுப்படுகொலை செய்த மெராவை, அவரது குடியிருப்பு வீட்டில் சுற்றிவளைத்த பொலிஸார் 32 மணி நேர கண்காணிப்பின் பின்னர் சுட்டுப்படுகொலை செய்திருந்தனர்.
மெரா படுகொலை செய்யப்பட்டு சில மணி நேரத்தில் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்ட மெராவுக்கு அஞ்சலி செலுத்துவோம் எனும் ஃபேன் பேஜ் பக்கம் 500 க்கு மேற்பட்ட பேஸ்புக் பயனாளர்களால் லைக் செய்யப்பட்ட பின்னர், பிரான்ஸ் காவற்துறையினரின் கோரிக்கையை அடுத்து Detactivate செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக