தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.3.12

ஈரானுக்கு எதிராக ஓமன் செயற்பட வேண்டும்: ஜெர்மன் கோரிக்கை


டெஹரான்(Tehran's) அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர ஓமனும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜெர்மனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டர்வெல்(Guido Westerwelle) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமன் சுல்தான் கபூஸ் அவர்களை சந்தித்து பேசினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு வெஸ்ட்டர்வெல், ஈரான் நாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைக
ளுக்கு ஓமன் முழு ஆதரவளிக்கும் என்று நம்புவதாகக் கூறினார். இந்த நிபந்தனைகளுக்கு உலக அளவில் பல நாடுகள் ஆதரவு அளித்து வரும் நிலையில் எங்களோடு எதிர்த்து வாதாடுவோரையும் நாங்கள் சம்மதிக்க வைக்கிறோம், என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரான் மீது நிபந்தனைகள் விதிப்பது மட்டுமல்ல, அந்நாடு மற்ற நாடுகளைச் சுற்றி வளைக்கத் திட்டமிட்டிருப்பதையும் தடுத்து நிறுத்தப் போகிறோம் என்று வெஸ்ட்டெர்வெல் கூறினார். ஈரானுக்கு ஓமனிலிருந்து பொருட்கள் செல்வது அதிகரித்து வருகிறது.
சர்வதேச நிபந்தனைகளுக்கு எதிராகப் பொருட்களை அதிவேகப் படகுகளில் ஹோர்முஸ் நீர்ச்சந்திப்பில் இருந்து அரபிக்கடலின் எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடாப் பகுதிக்குக் கொண்டு செல்கின்றனர்.
ஓமனின் சுங்கத்துறை முகவர் கசாப், ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில், இந்த மாதம் மட்டும் சுமார் 500 படகுகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார். வளைகுடா நாட்டுப் பகுதியில் இவை சட்டரீதியான இந்தச் செயல், ஈரான் கடல் எல்லையைத் தொட்டவுடன் சட்டத்திற்குப் புறம்பானதாக மாறிவிடுகிறது என்றார்.
ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கை இஸ்ரேல் நாட்டில் பகீரங்கமாக விவாதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அழிவு சார்ந்தது என்றும் மிகவும் தீவிரமானது என்றும் இஸ்ரேலில் கருத்து நிலவுகிறது.
இந்தத் தவறான எண்ணத்தை விலக்க வேண்டும் என்பதற்காகவே தான் இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை ஓமன் வந்ததாக வெஸ்ட்டர்வெல் தெரிவித்தார். வெஸ்ட்டர்வெல்லும், ஐரோப்பிய நட்பு நாடுகளும் நிபந்தனைகளை விதித்திருக்கும் அதே சமயத்தில் அடுத்த மாதம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வந்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் கேத்தரீன் ஆஷ்டன் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர், பிரிட்டன், சீனா, ஃபிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் சார்பாக பேசுவார்.
இதுவரை பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லாத நிலையில், கடந்த வருடம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் ஈரானிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு வருவதாக எழுத்துப் பூர்வமாக ஒரு கடிதம் பெறப்பட்டது. இந்த கடிதத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த முயற்சியைத் தொடரத் திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்: