தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.3.12

ரஜோனாவுக்கு 31ம் திகதி தூக்கு : பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரிப்பு


பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் படு கொலை வழக்கில் பல்வந்த் சிங்க் ரஜோனாவுக்கு எதி ர்வரும் மார்ச் 31ம் திகதி தூக்குத்தண்டனையை நிறை வேற்றுமாறு பாட்டியாலா சிறைக்கு சண்டிகார் சிறப் பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அம்மாநில த்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.ரஜோனாவின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சீக்கிய உயரிய சமூக அமைப்புக்கள் இன்று பல இடங் களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதுடன்
நாளையும் தொடர போவதாக அறிவித்துள்ளன இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலும் ரஜோனா அடைக்கப்பட்டுள்ள பாட்டியாலா மத்திய சிறைக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தின் உயரிய மத அமைப்புக்களும் ரஜோனாவின் தூக்குத்தண்டனை தீர்ப்புக்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.  இந்நிலையில் சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகால் தத், ஏற்கனவே அறிவித்திருந்த படி, நாளை மாநிலம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதுடன், சீக்கியர்கள் அனைவரும் காவி நிறை உடை அணிந்து தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு, நீதிமன்ற தீர்ப்பை தம்மால் நிறைவேற்ற முடியாது என பாட்டியாலா சிறை கண்காணிப்பாளரும் அறிவித்துள்ளார். இச்செயல் நீதிமன்றத்தை அவமதிப்பதாக பட்டியாலாயா நீதிமன்றம் அவருக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதேவேளை தமக்கு அரசியல் தலைவர்கள் யாரும் கருணை காட்டத்தேவையில்லை என அகாலிதளம் - பாரதிய ஜனதா கூட்டணி அரசு மற்றும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆகியவற்றுக்கு பதனது சகோதரி மூலம் தெரிவித்துள்ளார் ரஜோனா.

என்னுடைய நோக்கத்தை காங்கிரஸும், பாரதிய ஜனதாவும் அரசியலாக்க முயற்சிக்கின்றன. அதற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் 1992-1995 காலப்பகுதியில் முதல்வராக இருந்தவர் பியாந்த் சிங். அம்மாநில மக்களால் Lion of Panjab என அழைக்கப்பட்ட அவர்  1995ம் ஆண்டு சண்டிகாரில் கார்க்குண்டு தாக்குதல் மூலம் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் மேலும் 3 கமாண்டோக்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
கலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கோரி சீக்கியர்கள் மேற்கொண்டிருந்த புரட்சி, பியாந்த் சிங் ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து முற்றாக ஒடுக்கப்பட்டதுடன், பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் அமைதி நிலை ஏற்பட்டது. எனினும் காவற்துறை மற்றும் இராணுவத்தின் கொடும் அடக்குமுறைகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டே, இந்த அமைதி நிலைநாட்டப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்திருந்த நிலையிலேயே பியாந்த் சிங் கொல்லப்பட்டார்.

0 கருத்துகள்: