கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கீனன் ஹீபர்ட் என்ற மூன்று வயது சிறுவனை நள்ளிரவில் கடத்திச் சென்ற திருடன், நான்கு நாட்களுக்கு பின்பு சிறுவனை வீட்டில் வந்து ஒப்படைத்துள்ளான்.கிரான்புரூக் நீதிமன்றத்தில் இந்தக் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராண்டால் ஹோப்பே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்தல்,
உள்ளே புகுதல் மற்றும் கடத்தல் என மூன்று வழக்குகள் இவன் மீது பதிவாகி உள்ளன.கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் காலையில் ஸ்பார்வுடில் உள்ள ஒரு வீட்டில் பெற்றோர் தங்கள் மூன்று வயது மகனைக் காணாமல் தவித்து காவல்நிலையத்தில் முறையிட்டனர்.
கோல்கரியின் தென்மேற்கே 150 கி.மீ. வரை காவலரும், சமூக ஆர்வலரும் இந்தச் சிறுவனைத் தேடிப் பார்த்தனர். நான்கு நாட்கள் கழிந்ததும் திடீரென்று ஒரு நாள் நள்ளிரவு எந்தவித துன்புறுத்தலுக்கு ஆளாகாமல், அந்தச் சிறுவன் திரும்பி வந்து விட்டான்.
ஷீபர்ட் வருவதற்கு முன்பே காவல்துறையினருக்கு ஹோப்லே மீது சந்தேகம் வந்தது. இருப்பினும் சிறுவன் வீடு வந்து சேர்ந்து ஒரு வாரத்திற்கு பின்பு ஹோப்லேயை கைது செய்தனர். அவன் மீது மூன்று குற்றவியல் வழக்குகள் பதிவாயின.
திரும்பிவந்த சிறுவனிடம் பேட்டி எடுத்த போது அவனது பெற்றோர் அவன் எந்தவிதமான பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்தனர். எனினும் குழந்தை கடத்தப்பட்டதற்கான விபரம் இது வரை தெரியவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக