சீன பிரதமரின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இந்திய பாராளுமன்ற முன்றலில் திபெத்திய இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இவ்வார இறுதியில் சீன பிரதமர் ஹூ ஜிண்டா இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் திபெத் மீது சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், சீன பிரதமரின் வருகை எதிர்த்தும்
நேற்று டெல்லி பாராளுமன்றம் முன்பாக பல நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஜேஸி எனும் குறித்த இளைஞர் தன் மீது தீயை பற்றவைத்துக்கொண்டுள்ளார்.
நேற்று டெல்லி பாராளுமன்றம் முன்பாக பல நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஜேஸி எனும் குறித்த இளைஞர் தன் மீது தீயை பற்றவைத்துக்கொண்டுள்ளார்.
நீரூற்றி தீயை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்ட அயலவர்கள், உடனடியாக அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் கிட்டத்தட்ட இரு நிமிடங்களுக்கு அவர் தீயுடன் நடந்துவந்தால், 98% உடல்பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தோல் பகுதி மோசமாக கருகியுள்ளதாகவும்,அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2006ம் ஆண்டு திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த 27 வயதான யேஷி, கடந்த இருவருடங்களாக டெல்லியிலேயே வசித்து வந்துள்ளார். அவருடைய தன்னிச்சையாக தீடிரேன மேற்கொண்ட இச்செயற்பாடு, பெரும் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
திபெத்துக்கு சீனா சுதந்திரம் கொடுக்கும் வரை சீனா இதைத்தான் எதிர்கொள்ளும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்றுமொரு திபெத்தியர் தெரிவித்தார். கடந்த வருடத்தில் சீனாவின் ஆக்கிரமைப்பை எதிர்த்து, 30க்கு மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்துள்ளனர்.
சீனாவின் இரக்கமற்ற கொள்கைகளே திபெத்தியர்களை இது போன்ற முடிவை எடுக்க வைப்பதாக திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா குற்ற்றம் சாட்டியுள்ள நிலையில், தலாய் லாமா இவ்விவகாரத்தை மேலும் சிக்கலாக்குகிறார் என சீனா குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News : Source
0 கருத்துகள்:
கருத்துரையிடுக