தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.3.12

அனுபவமில்லாத வடகொரிய தலைவரை தவறாக வழிநடத்துபவர் யார்? ஒபாமா

அனுபவம் இல்லாத ஒரு இளம் தலைவர் வடகொரியாவின் அ திபராக உள்ள நிலையில், அந்த நாட்டை வழிநடத்துவது யார் என அமெரிக்க அதிபர் ஒபாமா கேள்வி எழுப்பி உள்ளார். அணு ஆயுத உற்பத்தியை தடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தெ ன்கொரியாவில் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாடு இன்று ந டைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன் மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் மெட்வ தேவ் உள்ளிட்ட தலைவர்கள் சியோல் சென்றுள்ளனர். வட கொரியா மற்றும் தென்
கொரியாவுக்கு இடையிலான பிரச்னைக்குரிய எல்லை ப் பகுதியை ஒபாமா நேற்று பார்வையிட்டார். பின்னர், அணு ஆயுத உற்பத்தியி ல் ஈடுபட்டு வரும் வடகொரியா பற்றி அவர் கூறியதாவது: அணு ஆயுதத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஈரான், வடகொரியா உள்ளிட்ட சில நாடுகள் அணு ஆயுத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

குறிப்பாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங்,2 மரணத்துக்குப் பிறகு அவரது இளம் வயது மகன் கிம் ஜாங்,உன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இவருக்கு போதுமான அனுபவம் இல்லாத நிலையில், நாட்டை தவறாக வழிநடத்திச் செல்பவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. இவர்களுடைய தொலைநோக்குப் பார்வை என்ன என்பதும் தெரியவில்லை.

வடகொரிய முன்னாள் அதிபர் கிம் 2ம் சங் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அடுத்த மாதம் ஒரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பப் போவதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதில் உண்மை இல்லை. செயற்கைக்கோள் என்ற பெயரில், ஏவுகணை பரிசோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது. இந்த முடிவை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அணுசக்தி உச்சிமாநாட்டிலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

0 கருத்துகள்: