உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜேர்மனியின் BMW கார் நிறுவனம், சந்தைக்கு வந்த தனது 1.3 மில்லியன் கார் மாதிரிகளை மீள பெற்றுக்கொள்ள மு ன்வந்துள்ளது.2003-2010 காலப்பகுதியில், சந்தைக்கு வந்த BMW நிறுவனத்தின் 5 மற்றும் 6 Series கார்களின் மின்கல ன் (Battery) கேபிள் கவசங்கள் தவறுதலான முறையில் பொ ருத்தப்பட்டுள்ளதால் அவற்றின் எந்திரங்கள் இயங்க மறுப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் கார் தீப்பிடிக்கும் சந்
தர்ப்பமும் ஏற்பட்டுள்ள தாகவும் புகார் கூறப்பட்டது.
தர்ப்பமும் ஏற்பட்டுள்ள தாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து இக்கார்களை பாவனையாளர்களிடமிருந்து இக்கார்களை மீளக்கோரியுள்ள BMW நிறுவனம், தமது கிளைகளில் ஒப்படைத்து தவறுள்ள கேபிள்களை 30 நிமிடங்களுக்குள் இலவசமாக திருத்தி மீண்டும் பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது.
BMW கார் நிறுவனம் தனது கார் விற்பனை மூலம் கடந்த வருடம் 4.9 பில்லியன் யூரோ லாபமீட்டியிருந்ததுடன், 68.82 பில்லியன் யூரோவுக்கு கார் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக