பஹாரம்பூர்:தொடர்சியாக பெண் குழந்தைகளை பெற்றதால் இளம்பெண்ணை கணவனும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்துள்ளனர். இக்கொடூர சம்பவம் மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வாக்ராமில் நடந்தேறியுள்ளது.ருபாலி பீபி என்ற 25 வயது பெண்மணி கொலைச் செய்யப்பட்டுள்ளார். இவருடைய தீயில் எரிந்துபோன உடல் பின்னர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக 2 பெண்குழந்தைகள் பெற்றதால் ருபாலி பீபியை தீர்த்துக்கட்ட கணவனின் வீட்டார் திட்டம் தீட்டியதாக அவரது குடும்பத்தினர் வாக்ராம் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில் கூறியுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பீபியின் கணவன் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்ட் ஹிமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.
நியூஸ்@தூது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக