தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.3.11

லிபியா சிக்கலை தீர்க்க லண்டனில் சர்வதேச மாநாடு


லிபியா மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு தலைமை தாங்க முடியாத அவலத்தில் தடுமாறிய நேட்டோ ஒருவாறாக நேற்றிரவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. துருக்கியின் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு போன்ற நெருக்கடிகளுக்கு பின்னர் நேற்றிரவு ஓர் உடன்பாட்டை எட்டித் தொட்டுள்ளது.
இதன்படி ஐ.நாவால் விதிக்கப்பட்ட லிபியாவிற்கு எதிரான விமானப்பறப்பு தடை வலயத்தை நேட்டோ விமானப்படைகள் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.

1. ஐ.நாவினால் தீர்மானம் செய்யப்பட்ட விமானப்பறப்பு தடையை கண்காணித்து லிபிய விமானங்களை கட்டுப்படுத்துவது.
2. விமானங்கள் மூலம் தரைப்படைகள் மீதும், இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவது.
இந்த இரண்டு விவகாரங்களில் முதலாவதை நேட்டோ செய்யும், மற்றையதை பிரான்ஸ், இங்கிலாந்து தலைமையிலான கூட்டுப்படைகள் செய்யும். நேட்டோ படைகள் லிபியத் தரை மீது குண்டு வீச்சு நடாத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தச் சம்மதம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிபியா மீதான தாக்குதலுக்கு தான் தலைமைதாங்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்த பின்னர் ஏற்பட்ட நெருக்கடி இரண்டு பெரிய அணிகளை களமிறக்கியுள்ளது.
இந்த நிலையில் கருத்துரைத்த ஐ.நா செயலர் பான் கீ மூன் ஐ.நா சபையால் விதிக்கப்பட்ட தடைகள் எதையும் கடாபி மதித்து நடக்கவில்லை என்று தெரிவித்தார். ஐ.நாவின் 1970 – 1973 ம் ஆண்டு விசேட சட்டவிதிகளை கடாபி மீறிவிட்டார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆகவே ஐ.நாவின் கடமைகளை நேட்டோ நிறைவேற்றுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க படைத்துறை வைஸ் அட்மிரல் பில் கோற்றெம்ரி கருத்துரைக்கையில் நேட்டோவின் கூட்டத்தொடர் கடும் வலியுடனேயே ஒரு முடிவைத் தொட்டது என்றார். அதேவேளை கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அகமட் டவற்றோ கூல் பிரச்சனை சுமுகமாக முடிந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தனிப்பட்ட நாடுகளை குற்றம் சுமத்தி பகையாளி ஆக்கும் கடாபியின் உத்தியை முறியடிக்கவும் நேட்டோ களமிறங்க வேண்டியிருக்கிறது. தாக்குதல் பொதுமைப்படுத்தப்பட இது அவசியமாகும். ஆகவே நேட்டோ களமிறங்குவது பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். இந்த விவகாரத்தில் தலையிட்ட நேட்டோ இனி இதே பாணியில் மற்றய இடங்களிலும் தலையிடும் என்பது கவனிக்கத்தக்கது.
சேர்பிய முன்னாள் அதிபர் சலபெடான் மிலோசெவிச்சிற்கு எதிராக மூன்று மாதங்கள் நேட்டோ குண்டு வீசியும் எதுவும் நடக்கவில்லை. ஆகவே தரைப்படையை இறக்குவது அவசியம் என்ற கருத்துக்கள் மேலோங்கிய நிலையில் நேட்டோவின் தற்போதய முடிவு பங்கருக்குள் கிடக்கும் கடாபிக்கு விமான காற்றாடிகளால் சாமரம் வீசின கதையாகவே உள்ளது.

0 கருத்துகள்: