நேற்று புறுக்சல்சில் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் எண்ணெய் விற்ற பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்தது. கடாபியுடன் தொடர்பு கொண்டு, எண்ணெய், காஸ் போன்றவற்றை யாரெல்லாம் வாங்கினார்கள் என்ற நெடிய பட்டியல் ஒன்றையும் அது வெளியிட்டுள்ளது. இதில் தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் என்று பலருடைய பெயர்களையும் தந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடாபிக்கு வழங்க
வேண்டிய பெற்றோலிய வர்த்தக நிலுவைகள் அனைத்தும் அப்படியே வங்கிகளில் உறைய வைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக லிபியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.உலகத்தின் பாரிய பொருளாதர மந்தமும், அதனால் ஏற்பட்டுள்ள பெரும் குழியும் உலக நாடுகள் ஏற முடியாத ஆழமாக உள்ளது. ஆனால் உலகப் பணம் முழுவதும் ஒரு சில சர்வாதிகாரிகளின் கோடியால்களுக்குள் குவிந்து கிடக்கிறது. இப்பணத்தைப் பறித்து பொருளாதாரத்தின் பள்ளங்களை நிரவுவதே இன்றுள்ள உடனடி பரிகாரமாக உள்ளது. முதலாவதாக எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கின் பணம் மிகப்பெரிய அதிர்ஸ்டமாக இருந்தது, இப்போது கடாபி மாட்டியுள்ளார். சர்வாதிகாரிகளின் பணம் இப்போது வாராவரம் லொத்தர் போல விழுந்து கொண்டிருக்கிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக