தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.3.11

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு


மதுரை, மார்ச். 23- மதுரை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு, தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிசன் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய உத்தரவாக தமிழ்நாட்டில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்-டாப் கம்ப்யூட்டருடன் இணைந்த கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றை இயக்கும் பணியில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த தேர்தல் கமிசன் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்த பணியில் பி.இ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளது. அதே நேரம் மாணவிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் தேர்தல் கமிசன் அறிவுறுத்தி உள்ளது.
தேர்தல் கமிசனின் இந்த புதிய திட்டத்தை மதுரை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 555 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மதுரையில் உள்ள 4 கல்லூரிகள் தங்களது மாணவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த பட்டியல் கொடுத்து உள்ளன.

0 கருத்துகள்: