நிகோசியா, சிரியாவில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலியானார்கள். (வீடியோ )
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கர் நகரில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் "தரா" என்ற ஊரில், ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 100க்கும்
மேற்பட்டோர் இறந்து விட்டதாக மனித உரிமை கழகத்தினர் கூறுகிறார்கள். இதுபற்றி மனித உரிமை கழக நிர்வாகி அய்மான் அல்-அஸ்வாத் கூறுகையில், "போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். அவர்களை புதைக்க இன்னும் ஒரு வாரம் வரை ஆகும்" என்று குறிப்பிட்டனர். ஆனால் அரசு அதிகாரிகள், "துப்பாக்கி சூட்டில் 10 பேர் இறந்தனர்" என்று தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக