எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த மாதம் (பிப்ர வரி) 1-ந்தேதி கால்பந்து போட்டி நடந்தது. அப்போது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமா க மாறியது. அதில் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்துக்கு காரணமாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து அணியான மாஸ்ரி கிளப் 2 ஆண்டுகள்
விளையாட கூடாது என எகிப்து கால்பந்து கழகம் தடை விதித்தது. இதற்கு எகிப்து ரசிகர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
விளையாட கூடாது என எகிப்து கால்பந்து கழகம் தடை விதித்தது. இதற்கு எகிப்து ரசிகர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் எகிப்தில் போர்ட்சேட் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. அந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அப்போது கால்பந்து ரசிகர்கள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். மாஸ்ரி கிளப் அணி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
போர்ட்சேட் கால்பந்து மைதானத்துக்கு தீவைக்கப்பட்டது. எனவே ரசிகர்கள் உயிர் தப்பினால் போதும் என ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே கலவரத்தை அடக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ர்புகை குண்டுகளையும் வீசினர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 13 வயது சிறுவன் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கலவரம் நேற்று முழுவதும் நடந்தது. அப்போது ரோடுகளில் டயர்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூயஸ்கனால் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரக்காரர்களை போலீசார் சிரமப்பட்டு அடக்கினர். கெய்ரோவிலும், முக்கிய நகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக