சிரியாவில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்கா க ஐ.நா மற்றும் அரபு லீக் நாடுகளின் நல்லெண்ண தூது வர் கோஃபி அனான் இன்று பீஜிங்கிற்கு விஜயம் மேற் கொண்டுள்ளார்.சிரியாவில் போர்நிறுத்த உடன்படிக் கையை அமல்படுத்தும் வகையில் கோஃபி அனான் பரி ந்துரைத்துள்ள புதிய திட்ட அறிக்கைக்கு ரஷ்யா ஆதர வு தெரிவித்திருந்ததுடன், சிரியாவில்
இரத்த ஆறு ஓடுவதை தடுப்பதற்கு, அந் நாட்டு அரசுக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் இது என தெரிவித்திருந்தது.கோஃபி அனான் அடுத்தகட்டமாக சீனாவுக்கு பயணம் மேற்கொன்டுள்ளார்.
ரஷ்யா பரிந்துரைகளுக்கு சம்மதம் அளித்துள்ளதால் சீனாவும் கோஃபி அனானின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரிய அதிபர் அசாத் அலிக்கு எதிரான மக்கள் புரட்சி வெடித்ததிலிருந்து இதுவரை 8,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும் சிரிய அதிபரை பதவி விலக்க கோரி பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்திருந்தன.
இந்நிலையிலேயே கோஃபி அனான் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அவருடைய புதிய பரிந்துரை திட்டத்தின் படி, உடனடியாக சிரியாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பில் அனைத்து தரப்பும் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது முடிவுக்கு கொண்டுவரவேண்டும். போராட்ட குழுக்கள் மோதல்களை இடைநிறுத்துவதாக அறிவிக்க வேண்டும்.
மனிதநேய பணிகளுக்கு அனைத்து தரப்பும் வழிவிடுவதுடன், தினந்தோறும் இரு மணிநேரத்தினை இப்பணிகளுக்காக வழங்க வேண்டும். ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். போன்ற முக்கிய கோரிக்கைகள் விடுக்கப்படவுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக