சில நாட்கள் முன்பு ஒரு மிகப்பெரிய பரப்பரப்பு திருப்புமுனையாக, உலகின் மிகப்பிரபல பரிணாமவாதியும், அறிவியல் கற்றறிந்த "நாத்திக தீவிரவாதி"-யுமான பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், "இனிமேல் தான் ஒரு நாத்திகர் அல்ல" என்று அறிவித்து விட்டார்..!
[Agnostic - கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என நம்புபவர்; Atheist - கடவுள் நம்பிக்கை இல்லாதவர். (நன்றி: Google translation) ]
20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலாளர் என்று பலராலும் பாராட்டப்பட்ட பிரபல விஞ்ஞானி டாக்டர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இப்படித்தான் சொன்னார்... "இறைமார்க்கம் அற்ற அறிவியல் நொண்டி; அறிவியல் அற்ற இறைமார்க்கம் குருடு" என்றார்..!
அவர் அறிந்த யூதமதம் அடிப்படையில் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், குர்ஆனை பொருளுணர்ந்து கற்றவர்களுக்குத்தான் தெரியும்... அவ்வாக்கியத்தின் முதல் பகுதியில் உள்ள ஆழம் எவ்வளவு பெரிது என்று..!
(முஹம்மதே!) 'உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது..! (குர்ஆன் - 34:6)
ஐன்ஸ்டீன் மட்டுமல்ல... இன்னும் ஏகப்பட்ட அறிவியல் தத்துவங்களை கூறிய சிந்தனாவாதிகளும், அவற்றை நிரூபித்துக்காட்டிய அறிவிற்சிறந்த விஞ்ஞானிகளும்... கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களே..!
ஆனால், நம் தமிழகத்தில் நாம் பார்த்த ஒரு பிரபல நாத்திகர், 'பெரியார்' என்று அழைக்கப்படும்திரு.ஈ.வெ.ராமசாமி..! அவர் கடவுளை அறியும் முயற்சியில் டாக்கின்ஸ் போன்று ஏதும் அறிவுப்பூர்வமான சிந்தனையில் மூழ்கிய பின்னர் நாத்திகர் ஆனாரா... என்றால் இல்லை..! உலகின் எல்லா சமய நூல்களையும் படித்து அறிந்துவிட்டு நாத்திகர் ஆனாரா என்றால் இல்லை. எல்லா சமய மக்களும் சாதிய ஏற்றத்தாழ்வு, மத மூடநம்பிக்கை என இழிவாக வாழ்வதை பார்த்துவிட்டு நாத்திகர் ஆனாரா என்றால் அதுவும் இல்லை..!
மாறாக, அவர் கிருஸ்துவ மதத்தையும் அதன் கடவுளையும் அவர் எதிர்க்கவில்லை..! இன்னும் ஒரு படி மேலே போய், "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என்று பெரியாரே சொல்லியும் இருக்கிறார்..!
பின்னர் எப்படி அவர் நாத்திகர் ஆனார்..? இவர், தான் பிறந்த மதத்தில் உள்ள பார்ப்பணிய வர்ணாசிரம சாதிய ஏற்றத்தாழ்வு சார்ந்த கொடுமைகளையும் மற்றும் தன் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை பார்த்துவிட்டு, அதனால் தன் சமூகம் சீர்கெட்டு போய்விட்டதை அறிந்து செமை கடுப்பாகித்தான்..........
கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
....................என இப்படி எல்லாம் சொல்லியிருக்க வேண்டும்..!
அவர் இப்படி சொன்னது, 'அவர் சார்ந்த வர்ணாசிரம தர்மம் அடிப்படையில் அமைந்த சாதிய மதத்துக்கும் அதன் கடவுளுக்கும் மட்டுமே பொருந்தும்' என்று தான் நம்மால் முடிவுக்கு வர முடிகிறது..!
இப்படியாக 'கடவுள் இல்லை' என்ற நம்பிக்கையை கொண்டவர்களை உலகம் 'நாத்திகர்கள்' - 'Atheist' என்றுதான் அழைக்கிறது..! ஆனால், இவர்கள் முதலில் தம்மை 'சுயமரியாதை இயக்கத்தினர்' என்று அழைத்து பின்னர், "பகுத்தறிவாளர்கள்" என்று தங்களை தாங்களே பெயர்சூட்டி அழைத்துக் கொள்ளத் துவங்கினர்..!
இந்த "பகுத்தறிவாளர்கள்" பதம் சரியா..? இவர்களுக்கு இது உண்மையில் பொருத்தமா..? கடவுள் விஷயத்தில் இப்படி சொல்லிக்கொள்ள இவர்களுக்கு 'தார்மீக உரிமை' உண்டா..?
பார்ப்பனர்கள் பூணூல் போட்டு இருப்பது... ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் "இது பத்தினிகள் வாழும் வீடு" என்று பலகை தொங்கவிட்டு இருப்பது போல, தெருவில் உள்ள மற்றவரை இழிவு படுத்த கூடியது என்றார் பெரியார். அப்படி சொன்ன அவரே, 'கடவுள் இல்லை' என்ற அறிவியல் ஆதாரமற்ற வெற்றுக்கோஷம் போடும் தங்களை மட்டும் "பகுத்தறிவாளர்கள்" என்று கூறியது வடிகட்டின முரண்பாடு மட்டுமல்ல... முட்டாள்த்தனமும் கூட..! மற்ற கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களை இழிவு படுத்தக்கூடியது..!
பொதுவாக இவ்வுலகில்... மனிதன் தன் உடல் உடலுறுப்புக்களால் செய்யும் வேலைகளுக்கும் தன் மூளையை-சிந்தையை கசக்கிக்கொண்டு செய்யும் வேலைகளுக்கும் பெருத்த வித்தியாசத்தை பார்க்கிறோம். இவற்றுக்கு அளிக்கப்படும் மரியாதை, முக்கியத்துவம் இதெல்லாமே அவ்வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவிலும் வசதிகளின் மதிப்பிலும் நன்கு தெரிந்துவிடும்..!
தொட்டுணர்ந்து அறியும் மிகச்சாதாரண அறிவு கொண்ட தொட்டாற்சிணுங்கி மரம் போன்ற பச்சைத்தாவர ஜீவராசிகள் ஓரறிவு ஜீவன்களாம்..!
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்து சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப்படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக்காப்பாயாக!'' (என்றும் அவர்கள் கூறுவார்கள்) (குர்ஆன் - 3:190, 191)
ஆனால்..............................
0 கருத்துகள்:
கருத்துரையிடுக