இதுவரை காலமும் இத்தாலியில் தயாராகும் ஆலிவ் ஆயி லுக்கு உலக நாடுகளில் தனியான மவுசு இருந்து வந்தது. அ திக விலை கொடுத்து ஒலிவ் எண்ணெயை வாங்கிப் பாவித் துவந்த மக்கள் இதயத்திற்கும், உடலுக்கும் அது மிகவும் ந ல்லதென்ற கருத்தால் கவரப்பட்டும் வந்தனர். ஆனால் இப் போது இத்தாலியில் கிளம்பியுள்ள புதிய விவகாரம் அங்கு தயாராகிய ஆலிவ் எண்ணெய் போலியாக தயாரித்து மோச டி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
இத்தாலிய வரித்தி ணைக்களம் இந்த விவகாரத்தை தற்போது தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளது. சுமார் 80 வீதமான ஒலிவ் எண்ணெய் போத்தல்கள் உண்மையான சுத்தமான ஆலிவ் எண்ணெயாக இல்லாமலே சந்தைக்கு வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ஜம்புறு ஒலிவ் எண்ணெய் என்ற பெயரில் வெளியான எண்ணெய், முற்று முழுதாக ஒலிவ் மரத்துடன் சம்மந்தப்படாத வெற்று இரசாயன மோசடி எண்ணெய் என்றும் கூறப்படுகிறது. இந்த மோசடி எண்ணெயை நல்ல எண்ணெயென பாவித்து பரலோகம் போனவர்கள் விபரம் வெளிவரவில்லை. ஆனாலும் விடயம் ஐரோப்பா முழுவதும் அம்பலமாகியுள்ளது. இதுபோல டென்மார்க்கில் மிகப்பழைய சிறந்த வைன் என்ற லேபலுடன் பல்லாயிரம் போத்தல் போலி வைன்கள் விற்கப்பட்டமை சென்ற மாதம் கண்டறியப்பட்டது. இதன் பின்னணியிலும் இத்தாலிய வைன் உற்பத்தியாளர் செயற்பட்டதாகக் கூறப்பட்டது. பதவி விலகிய இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனியின் ஆட்சியில் அவர் இத்தாலியை வழிநடாத்திய பாணி இப்போது மெல்ல மெல்ல சபையேற ஆரம்பித்துள்ளது. மேலும் இத்தாலியின் பொருளாதார ஒழுக்கம் கண்காணிக்கப்பட வேண்டும், இல்லையேல் அந்த நாட்டுக்கு உதவ முடியாதென ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கூறிவருவது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக