தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.11

மலேசியா சிறைகளில் 3234 இந்தியர்கள்: மேலவையில் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர் 24- நாட்டில் மொத்தம் 3234 இந்தி யர்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருவதாக மேலவையில் நேற் று முன் தினம் தெரிவிக்கப்பட்டது.டிசம்பர் 9-ஆம் தேதி வரை மட்டும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 பேரும், ஊரடங்கு சட்டம் சட்டத்தின் கீழ் 485 பேரும், பல்வேறு
குற்றச்செயல்கள்  2,746 பேர் என மொத்தம் 3,234 இந்தியர்கள் சிறைதண்டனை அனுபவித்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஷாமுடின் துன் ஊசேன் மேலவையில் தெரிவித்தார்.இதனிடையே, ஒட்டுமொத்தமாக நாட்டில் ஊரடங்கு சட்டத்தின் கீழ் மொத்தம் 1,487 பேரும், இசா சட்டத்தின் கீழ் மொத்தம் 37 பேரும், பல்வேறு குற்றச்செயல்களுக்காக 30,010 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருவதாக இஷாமுடின் மேலவையில் தெரிவித்தார்.இவர்களில் 21,619 பேர் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் வேளையில், எஞ்சிய 8,391 பேர் போலீஸ் தடுப்புக்காவலுக்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.முன்னதாக நேற்று முன் தினம், மேலவை கேள்வி நேரத்தின் போது செனட்டர் டாக்டர் எஸ். ராம கிருஷ்ணனின் கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் டத்தோ ஸ்ரீ இஷாமுடின் இவ்வாறு பதிலளித்தார்.மேலும் ஊரடங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 673 பேர் மலாய்க்காரர்கள், 485 பேர் இந்தியர்கள், 168 பேர் சீனர்கள், 75 பேர் மற்ற இனத்தவர்களாவர். 85 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.பல்வேறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகலில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 15,373பேர் மலாய்க்காரர்கள், 3170 பேர் இந்தியர்கள், 2746 பேர் சீனர்கள் , 2369 மற்ற இனத்தவர்கள், மேலும் 6352 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் உள்துறை அமைச்சர் தமது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: