உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்டு, கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் ஒரு நாளில் தேர்தல் நடைபெறும்.உத்திரபிரதேசத்தில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் நாள்:மணிப்பூர் - ஜனவரி 28
பஞ்சாப், உத்தரகாண்டு - ஜனவரி 30
உத்தரப் பிரதேசம் - பிப்ரவரி 4,8,11 ,15 ,19 ,23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக நடைபெறும்.
கோவா - மார்ச் 3
தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 4 அன்று நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரைஷி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக