தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.11

கண்காணிப்பு வளையத்திற்குள் மன்னார்குடி சசி கும்பல்


போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட, சசிகலா கும்ப லின் நடவடிக்கைகள் அனைத்தையும் உளவுப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சசி கும்பலா ல் பாதிக்கப்பட்டவர்கள் பலர், கண்கொத்தி பாம்புபோல், சசி கூ ட்டணியின் அனைத்து நடமாட்டங்களையும் உன்னிப்பாக கண் காணித்து வருகின்றனர்.நிலைமை தலைகீழ்: சசிகலா கும்ப லைச் சேர்ந்தவர்கள் கார்டனுக்குள் இருக்கும் வரை, யார் பார்க் க வந்தாலும், அவ்வளவு சுலபமாக முதல்வரை பார்த்து விட முடியாது. முதல்வரை யார்
பார்க்க வேண்டும், யார் பார்க்கக் கூடாது என்பதை அவர்கள் தான் முடிவு செய்யும் நிலை இருந்தது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. மன்னார்குடி கும்பல் விரட்டியடிக்கப்பட்ட பின், கார்டனில் பாதுகாப்பு போலீசார் வரை மாற்றப்பட்டு, அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கார்டனுக்கு வரும் மனுதாரர்கள் அனைவரும் கடும் சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு, அனைவருடைய மனுவும் பெறப்பட்டு, உரிய கிளைத் தகவல்களுடன் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மனு கொடுத்தவரின் பிரச்னைகள் உடனுக்குடன் கவனம் செலுத்தப்படுவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வருக்கு போலீஸ் தரப்பில் இருந்து வரும் தபால்கள் அனைத்தும் நேடியாக பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது. முதல்வரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் சொல்ல ஆர்வம்: இதற்கிடையில், மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், கட்சியில் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் உன்னிப்பாக இருக்கும்படி, மூத்த தலைவர்களுக்கு முதல்வர் கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிப் பொறுப்பில் இருந்த மகாதேவன், தினகரன் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் உரிய இடத்திற்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களே, இவர்களை கண்காணித்து அவ்வப்போது தகவல்களை அனுப்ப தயாராகிவிட்டனர். மேலும், மன்னார்குடி கும்பல் சேர்த்த சொத்துக்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் சில வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இரும்பு கழிவுகளை பெற்று வெளியேற்றும் ஒப்பந்தத்தை, முந்தைய ஆட்சிக்காலத்தில் பெற்றிருந்தவரே, இந்த ஆட்சிக்காலத்திலும் பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக அவர் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துள்ளார். ஆனால், அவர் பணிகளை துவக்கிய ஒரு மாதத்திலேயே மீண்டும் மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் நுழைந்து அதிக தொகை பார்த்ததாகவும், தற்போது அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை போலீசில் சில முக்கிய வழக்குகள் விசாரணையிலும் மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு, தடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களும் தற்போது, தோட்டத்தில் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றன.

0 கருத்துகள்: