பிரபல எகிப்து இமாம் ஒருவரை போப் பெனடிக்ட் உதட்டோடு உதடாக முத்தமிடுவது போன்று வெளியிடப்பட்ட பெனட்டன் நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.எகிப்து நாட்டின் அல்-அஸார் மசூதி இமாம் முகமது அகமது அல் தயீபை போப் உதட்டில் முத்தமிடுவது போன்ற படத்துடன் மிகப்பெரிய
பேனர் ஒன்று வாடிகன் அருகே ஒரு பாலத்தின் மீது தொங்கவிடப்பட்டிருந்தது. பின்னர் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதில் நடவடிக்கை எடுப்பது குறித்து வாடிகன் வெளியுறவுச் செயலர் டர்சிஸியோ பெர்டோன் ஆய்வுசெய்து வருவதாக ஹோலி சீ பிரஸ் அலுவலக இயக்குநர் ஃபெடரிகோ லொம்பார்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா-சீன அதிபர் ஹூஜிண்டோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ- பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் ஆகியோரும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது போன்று பெனட்டன் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதற்கு எழுந்த எதிர்ப்புகளை அடுத்து இந்த விளம்பரங்களை அந்த நிறுவனம் வாபஸ் பெற்றுக் கொண்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக