தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.11

கோர்ட் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு அடி, உதை

புதுடெல்லி, நவ. 20 -  தொலைத் தொடர்புத் துறைக்கு கேபிள் வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் சுக்ரா முக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி அறித்த சில நிமிடங்களில் கோர்ட் வளா கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரணம் தண்டனை பெற்ற சுக்ராமுக்கு கோர்ட் வளாகத்தில் அடி, உதை விழுந்தது
தான். கோர்ட் வளாகத்தில் அவரை தாக்கியவரின் பெயர் ஹர்விந்தர் சிங். சுக்ராமை இவர் கைகளாலும், கால்களாலும் அடித்து உதைத்தாராம். ஆனால் இவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. சுக்ராமுக்கு தர்ம அடி கொடுத்த இவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சுக் ராமை இவர் ஏன் தாக்கினார் என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 13 ஆண்டுகள் ஜாமீனில் இருந்த சுக்ராம் நேற்று சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டார். 

0 கருத்துகள்: