தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.11

கடாபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கைது


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின், மகன் சைப் அல் இஸ்லாம் தெற்கு லிபியாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இதனை தேசிய இடைக்கால கவுன்சிலும் உறுதிப்படுத்தியுள்ளது.லிபியாவின் தெற்கு பாலைவன நகரமான சின்ரனில் இவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். அரேபிய உடையில் சாதாரணமாகவே இருந்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டதை
தொடர்ந்து இவரை காண பெருமளவிலான மக்கள் திரளத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் திரிபொலிக்கு கொண்டு வரப்படும் அவர், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திடம் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்படும் போது சைஃப் அல் இஸ்லாம் (லிலிய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படம்)


கடாபியின் குடும்பத்தில், கடாபி உட்பட அவரது மகன்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் எஞ்சியிருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவராக அல் இஸ்லாம் கணிக்கப்பட்டார்.
இவ்வளவு நாட்களும் அவர் மறைமுகமாக பதுங்கி வாழ்ந்து வந்தார். கடாபியை சுற்றி வளைத்த போது மோசமாக தாக்கி படுகொலை செய்த போராட்ட குழுவினர் மீது மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்ததால் அல் இஸ்லாம் விடயத்தில், அவர்கள் கவனமாக நடக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: