அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி ஒரு சர்ச்சையில் சிக்கி கொண்டார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி மைக் முல்லனுக்கு எழுதிய கடிதத்தை ஹக்கானி தான் கொண்டு போய் கொடுத்தார் என்றும் அந்த கடிதத்தையே இவர் தான் வடிவமைத்து கொடுத்தார் என்றும் வதந்திகள் வெளியாகி உள்ளன. இதனால்
அவர் பாகிஸ்தானுக்கு திரும்ப அழைக்கப்பட்டார். நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அவருக்கு உத்தரவிட்டது.இதை தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் சர்தாரிக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று பிரதமர் கிலானி தெரிவித்தார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் தஞ்சம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. இதை ஹக்கானி மறுத்தார். நான் பாகிஸ்தானி. பாகிஸ்தானியாகவே நான் மரணம் அடைவேன் என்று கூறிய அவர் விரைவில் பாகிஸ்தான் சென்று விளக்கம் அளிப்பேன் என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக