தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.11.11

இந்தியாவின் கடும் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கியது அமெரிக்க இணையதளம்.


இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து அமெரிக்க அரசின் இணையதளத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரைபடம் நீக்கப்பட்டது. அமெரிக்காவின் டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட் என்ற துறையின் இணையதளத்தில் உலக நாடுகளின் வரைபடம் (மேப்) வெளியிடப்பட்டது.

அதில், இந்தியாவுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை, பாகிஸ்தானுடன் சேர்த்து வெளியிட்டுள்ளனர். ஆனால், வடக்கு காஷ்மீரில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள அக்சாய் சின் நிலப்பகுதிக்கு இந்தியா உரிமை கோருகிறது என்று சரியாக குறிப்பிட்டிருக்கிறது.

சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை மட்டும் சரியாக குறிப்பிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை, பாகிஸ்தானுடன் சேர்த்து வரைபடம் வெளியிட்டதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று மத்திய அரசு அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் அமெரிக்க அதிகாரிகளுக்கு நேற்று தகவல் அனுப்பினார்.
இதையடுத்து, அமெரிக்காவின் டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட் துறை இணையதளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் நேற்றே உடனடியாக நீக்கப்பட்டது.  இத்தகவலை துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் தெரிவித்தார்.

0 கருத்துகள்: