தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.11.11

கணினி பிழை திருத்துகிறோம் இந்தியாவில் இருந்து மோசடி தொலைபேசிகள்

இணைப்புக்களை வழங்குகிறோம் என்று டென்மார்க்கில் உள்ள தமிழர்களுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள் தமிழகத்தில் இருந்து வருவது வழமை. இவர்களிடம் மாட்டி பலத்த நஷ்டமடைந்து வங்கி அட்டைகளின் இலக்கத்தை மாற்றிய அனுபவம் பல தமிழருக்கு உண்டு. இதுபோல தற்போது டேனிஸ்காரருக்கு தொலைபேசிகள் வர ஆரம்பித்துள்ளதாக இன்றைய டென்மார்க் தொலைக்காட்சியின் செய்தி தெரிவித்தது. நாம் மைக்கிரோ சொப்ற் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம், உங்களுடைய கணினியில்
பாரிய பிழை நடந்துள்ளது. அதை நாங்கள் கச்சிதமாக திருத்தித் தருகிறோம், அதற்கு இவ்வளவு பணம் வேண்டுமென இவர்கள் ஆங்கிலத்தில் கேட்பார்கள். இதுபோல பலதடவைகள் தனக்கு இந்தியாவில் இருந்து போன் வருவதாகவும், இவர்களால் பெரும் தொல்லையாக இருப்பதாகவும் எலிசபெத் ரூல ஆனர்சன் என்ற பெண்மணி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் டென்மார்க் மைக்கிரோ சொப்ற் நிறுவனத்திடம் விசாரித்துப் பார்த்தபோது அப்படியாக தாம் தொடர்பு கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்கள். கணினி குறித்த அறிவு இல்லாதவர்களை ஏமாற்றி சுவை கண்ட பேர்வழிகளே இத்தகைய கூத்தாட்டங்களில் இறங்குவது வழமை. ஆகவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

0 கருத்துகள்: