தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.11.11

விமானத்திற்குள் ஈ – சிகரட் குடிக்கலாமா ?


புகைத்தல் பழக்கமுள்ளவர்களுக்காக இப்போது செயற்கையாக எரிக்காமலே புகை ஊதும் எலக்ரோனிக் சிகரட்டுக்கள் விற்கப்படுகின்றன. இந்த எலக்ரோ சிகரட்டுக்களை விமானங்களில் சிலர் புகைக்கிறார்கள். சட்டப்படி இதை அனுமதிக்கலாமா இல்லையா என்பது விமான ஊழியர்களுக்கு பிரச்சனையாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. விமானங்களுக்குள் புகைப்பது சர்வதேசரீதியாக பாரிய குற்றச் செயலாகும். ஆனால் ஒருவர் பயண
இருக்கையில் இருந்தபடியே எலக்ரோனிக் சிகரட்டை குடித்தால் அவரை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது, காரணம் அது ஈ-சிகரட். இது ஒருவகை நீராவிப் புகை என்றாலும் சிகரட் பிடிப்பது போன்ற உளவியல் தாக்கத்தையே மற்றவருக்கு ஏற்படுத்தும். ஆகவே அதைப் பிடிப்பதை அனுமதிக்க முடியாது என்று டேனிஸ் விமானிகள் கருத்துரைக்கிறார்கள். அதேவேளை பிரிட்டனில் சிகரட் குடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களுக்குள் ஈ – சிகரட்டை பற்ற வைக்க முடியும். எனவே இந்தக் குழப்பத்திற்கு சட்டரீதியான விடை காணப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று இன்றைய 24 மணி நேரம் பத்திரிகை எழுதியுள்ளது. இதற்கு இரண்டு உதாரண வழக்குகள் கீழே தரப்படுகின்றன.
இலங்கையில் நடந்த கதை :
இலங்கை நீதிமன்றங்களின் சுவர்களில் துப்பப்படாது என்று எழுதப்பட்டிருக்கும். அப்போது கல்லடி வேலன் என்பவர் வெற்றிலையைசப்பி சுவரில் துப்பிக் கொண்டிருந்தார். அவரை பிடித்துச் சென்று நீதிபதி முன்னால் நிறுத்தினார்கள்.
ஏன் துப்பினீர்…? என்று நீதிபதி கேட்டார்.
நீங்கள்தானே துப்பப் படாது ( துப்பினால் படாது ) என்று எழுதியிருந்தீர்கள். துப்பினேன் படுகிறது என்றார்.
நீதிபதி அவரை விடுதலை செய்தார்.
காரணம் துப்பப்படாது என்ற சொல்லை இரண்டாக சந்தி பிரித்தால் துப்பினால் படாது என்ற பொருள் வரும். அதுபோலவே இந்த சிகரட் வழக்கும் புகை பிடித்தல் சட்டத்தில் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது.
இலங்கையில் நடந்த யானை மார்க் தீப்பெட்டி வழக்கு :
கடைக்காரர் ஒருவர் யானை மார்க் தீப்பெட்டியை இரண்டு சதம் அதிகமாக விற்று மாட்டிக் கொண்டார்.
ஒரு யானை தீப்பெட்டிக்கு 2 சதம் அதிகமாக விற்றது குற்றம் என்றார் நீதிபதி.
அப்போது குறுக்கிட்ட சட்டத்தரணி இல்லை அவர் இரண்டு யானை தீப்பெட்டியையே விற்றார் என்றார்.
தீப்பெட்டியை பார்த்தார் நீதிபதி : அங்கே இரண்டு யானைகளின் படம் போடப்பட்டிருந்தது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரண்டு யானைகள் படம் போட்ட ஒரு தீப்பெட்டியை 2 சதம் கூட விற்றார் என்று வழக்கில் குறிப்பிடாத போலீசார் தோல்வியடைந்தனர்.
ஆகவேதான் ஈ – சிகரட்டை புதிய சட்டம் இயற்றாமல் அதை விமானங்களில் நிறுத்த முடியாது. மேற்கண்ட இரண்டு வழக்குகளும் இதற்கு சட்ட உதாரணங்களாகும்.

0 கருத்துகள்: