நெதர்லாந்து, நவ. 23- 2011ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு, முதன் முறையாக பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா யூ”ப்ஸாய் எனும் சிறுமி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.நெதர்லாந்தை சேர்ந்த Kids Rights அமைப்பினால், 2005ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை விருதுகளுக்காக 42
நாடுகளில் இருந்து 93 பேர் போட்டியிட்டனர். அவர்களில் மலாலாவுடன் சேர்த்து ஐந்து பேர் இறுதிப்போட்டியாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இன்று (நவம்பர் 20) இவ்விருது அறிவிக்கப்படவுள்ளது.
நாடுகளில் இருந்து 93 பேர் போட்டியிட்டனர். அவர்களில் மலாலாவுடன் சேர்த்து ஐந்து பேர் இறுதிப்போட்டியாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இன்று (நவம்பர் 20) இவ்விருது அறிவிக்கப்படவுள்ளது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்கள் மகளிர் பள்ளிகளுக்கு தடைவிதித்திருந்ததையும், அதனால் தனக்கும், தன்னை போன்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு பிபிசியின் ஆன்லைனில் எழுதிய பதிவுக்காக மலாலா யூசுப்ஸாயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவர் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் பாகிஸ்தானி ஆவார். மலாலாவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுமாயின் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மைரேட் மாகுயிர் (Mairead Maguire)இன் கரங்களினால் அவர் விருது வாங்கவுள்ளார்.
தனக்கும், தன்னை போன்ற பெண் சிறுமிகளுக்கும் குறித்த சமுதாயத்தில் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வரும் மலாலா, முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.
நேற்று (நவம்பர் 20) சர்வதேச குழந்தைகள் உரிமை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு இவ்விருது கிடைக்குமானாலும், தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், இப்பகுதியில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு தொழில் நிறுவனம் தொடங்கி எதிர்காலத்தில் அவர்கள் சொந்த காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்துவேன் என மலாலா தெரிவிக்கிறார்.
இத்தனைக்கும் அவரது வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு: ஐந்து பரிந்துரையாளர்களில் ஒருவரான தெ.ஆபிரிக்காவை சேர்ந்த Michaela Mycroft (17)க்கு சிறுவர்களுக்கான சமாதானத்திற்கான பரிசு நேற்று (திங்கட்கிழமை) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மைரேட் மாகுயிர் (Mairead Maguire) பரிசு வழங்கவுள்ளார்.
Chaeli என அழைக்கப்படும் மைகெலா தெ.ஆபிரிக்காவில், ஊனமுற்ற சிறார்களின் உரிமைகளுக்காக Chaeli Champign திட்டத்தை கொண்டு நடத்தியமைக்காக இப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக