கடந்த பத்தாண்டு காலத்தில் நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் உலகம் முழுவதும் 780.000 பேர் பரிதாப மரணமடைந்துள்ளார்கள் என்று புதிய கணிப்பு தெரிவிக்கிறது. இந்த மரணங்களில் முதலிடம் வகிப்பது ஏழை நாடான கெயிட்டி ஆகும். இங்கு கடந்த 2010 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 316.000 பேர் மரணமடைந்தார்கள். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம்
பெறுவது 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியாகும். இதில் 227.000 பேர் மரணமடைந்தார்கள். மூன்றாவது இடத்தை 2008ம் ஆண்டு சீனாவில் இடம் பெற்ற நில நடுக்கம் பெறுகிறது. இக்காலப்பகுதியில் உலகில் ஏற்பட்ட அகால மரணங்களில் 60 வீதமான மரணங்களுக்கு இயற்கையின் சீற்றமே காரணமாக இருந்துள்ளது. அதேவேளை சுனாமியால் இறந்த சோகங்கள் முடியமுன்னரே தனது சொந்த நாட்டு மக்களில் 140.000 பேரை கொன்ற பெருமை சிறீலங்காவிற்கு உரியதாகிறது. இது இவ்விதமிருக்க இன்று வெளியான நாஸாவின் அறிக்கை தென்துருவமான அன்டாட்டிக்கில் சுமார் 880 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பனிப்பாளம் கரைந்து பிளவடைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. தினசரி இரண்டு மீட்டர்கள் என்றளவில் இந்த வெடிப்பு வளர்கிறது. சுமார் ஐம்பது மீட்டர் ஆழத்துடன் வெடித்துக் கரையும் இந்தப் பனிமலை கடல் மட்டத்தில் பாரிய உயர்ச்சியை ஏற்படுத்தி பல நாடுகளை கடல் விழுங்க காரணமாகும் அபாயம் கொண்டது. ஏறத்தாழ ஒரு நியூயோர்க் நகரமே பனிப்பாளமாக கரைந்து உடைந்து புறப்படப்போவது கவனிக்கத்தக்கது. வட துருவம் கரைகிறதென உலக அரசியல் தலைவர்கள் புலம்பித்திரிய தென் துருவத்தில் இயற்கை தனது நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக