தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.11.11

இலங்கை மனித உரிமை மீறல் : ஜெனிவாவில் விசேட மாநாடு


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கடுமையான தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஓர் அமைப்பான சித்திரவதைகளுக்கெதிரான குழு (இர்ம்ம்ண்ற்ற்ங்ங் அஞ்ஹண்ய்ள்ற் பர்ழ்ற்ன்ழ்ங்) எதிர்வரும் 8 மற்றும் 9ம் திகதிகளில் ஜெனிவாவில் அவசரமாகக் கூடவிருக்கின்றது.

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்திருக்கும் இந்தக் குழு, அது குறித்தான சிபார்சுகளைக் கடந்த காலங்களில் இலங்கையிடம் கொடுத்திருந்தது. இப்போது அந்தச் சிபார்சுகள் இலங்கை அரசால் கிரமமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி இந்தக் குழு ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டில் ஆரோக்கியமான நிலைமை இல்லையென உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் செய்துள்ள முறைப்பாடுகளையும் சித்திரவதைகளுக்கெதிரான குழு இந்த முறை விரிவாக ஆராயவிருக்கிறது.
அதேவேளை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளித்திருக்கும் விளக்கமும் இந்தக் கூட்டத்தின்போது தீவிரமாக ஆராயப்படவிருக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச ஜூரர்களுக்கான ஆணைக்குழு, இலங்கை அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட்ட நிறுவகங்கள் செய்திருக்கும் விமர்சனங்களும் இந்தக் கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.

0 கருத்துகள்: