உலகளாவிய ரீதியில் சிறந்த வீடுகளை அமைக்கும் நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் உலகளாவிய கட்டிடக்கலை போட்டியில் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீடமைப்பு நிறுவனத்திற்கான பரிசை டென்மார்க் பெற்றுள்ளது. டென்மார்க்கில் உள்ள 8 ரெல்லிற் என்ற வீடமைப்பு நிறுவனம் இப்பரிசைப் பெறுகிறது. உலக ஆக்கிரெக் நிறுவனம் நடாத்தும் போட்டியிலேயே இந்த பரிசு
கிடைத்துள்ளது.
டென்மார்க் தலைநகர் கோப்பன்கேகன் பகுதியில் வீடுகளை அமைப்பதில் இந்த நிறுவனம் பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும் பல்வேறு உலகப் பரிசுகளையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரும் இந்த நிறுவனம் மேற்கண்ட அதி உயர் கட்டிடக்கலைக்கான பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய வீடமைப்பு குறித்த போட்டியில் 66 நாடுகளின் வீடமைப்பு நிறுவனங்கள் போட்டியிட்டுள்ளன. மொத்தம் 700 நிறைவு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதிகள் போட்டியில் இடம் பெற்றன. இந்தவகையில் டென்மார்க்கில் உள்ள 476 வீடுகள் கொண்ட புய்கூஸ் கோரிற் முதற்பரிசை வென்றுள்ளது. டேனிஸ் கட்டிடக் கலைஞர்கள் உலகளாவிய பாரிய கட்டிடங்களை கற்பனை வளத்தோடு வரைவதில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறார்கள். ஒரு நாட்டை உலகின் மகிழ்ச்சியான நாடாக வைத்திருந்தாலே இத்தகைய அதி உயர் கற்பனை வளம் தோன்றும் என்பது கவனிக்கத்தக்கது. உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பரிசை டென்மார்க் பல தடவைகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 8 ரெல்லிற் கட்டிட நிறுவனம் வீடுகளை தொகுதி தொகுதியாக அமைப்பதில் முன்னணி வகிக்கிறது. இதில் டேனிஸ் கட்டிடக்கலை நிபுணர்களும், மற்றய உலக நாடுகளின் பல்வேறு ஆற்றலாளரும் பணியாற்றுகிறார்கள். சிறந்த கற்பனை வளம் உள்ள கட்டிடக் கலைஞர்களுக்கே இந்த பரிசு கிடைக்கும் என்பதற்கு வெற்றிபெற்ற கட்டிடம் நல்ல உதாரணமாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக