தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.11

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !


சென்னை கோட்டூர்புரத்தில், கடந்த திமுக ஆட்சியில், சுமார் 200 கோடி ரூபாய் செலவில்கட்டப்பட்டநவீன வசதிகள் கொண்ட பிரமாண்ட, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடம் மாற்றிவிட்டு, அக் கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகதமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.அவரது இந்த அறிவிப்புக்கு, தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும்
எதிர்ப்பு கிளம்பியது. திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பான கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அறிஞர்களின், ஆர்வலர்களின் பொறுப்பிற்கே இதனை விட்டுவிடுகின்றேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந் நிலையில் இம் முடிவிற்கு எதிராக பல தரப்புக்களிலும் கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், நூலக இடமாற்றத்துக்குத் தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர்கள் புகழேந்தி, பிரபாகரன் ஆகியோர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இடம்பெறும் இந்த நூலக இடமாற்றத்தை தடுத்திட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த அம் மனுவினை விசாரித்த நீதிபதிகள், புதிய வசதிகள் பல கொண்ட நூலகத்தை இடமாற்றம் செய்வதன் நோக்கம் என்ன?, குழந்தைகள் மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்கவில்லையா? என்ற கேள்விகளை அரசதரப்பு வழக்கறிஞர்களிடம் முன் வைத்து, நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்தனர். மேலும் இது தொடர்பான அரசின் முடிவிற்கான காரணத்தை 6 வார காலத்திற்குள் அனுப்பி வைக்கும் வண்ணம் நிதிமன்ற நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: