தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.11

சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?


சயனைடுகளில் – பொட்டாசியம் சயனைடு(KCN) சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை அதிக நச்சு தன்மை கொண்டவை  இந்த வகை சயனைடுகளில் உள்ளா CN – அயனி தான் நச்சு பண்பிற்கு காரணம் .சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினோடு இணைகிறது . ஹீமோகுளோபினுள் உள்ள இரும்பு அணுக்களோடு வினைபுரிந்து ஆக்ஸிஜன் இரத்தத்தில் சேருவதை தடை செய்கிறது இதனால் சுவாசம் தடைபடுகிறது மேலும் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் செல்ல முடியாத நிலையில் மரணம் சம்பவிக்கிறது . இத்துனை செயல்படுகளும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிடும் .
சுருக்கமாக சொன்னால் சயனைடு உட்கொண்டு அது என்ன வித சுவை என உணரும் முன்பே மரணம் நிகழ்ந்துடும்.

சயனைடுகள் தங்கம் மற்றும் வெள்ளி சுத்தப்படுத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது உண்மையில்  தங்கம்  ஜொலி ஜொலிக்க சயனைடும் ஒரு காரணம்.

0 கருத்துகள்: