தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.11

கனிமொழிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது ஏன்?!

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் தீஹார் சிறைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் முன் அவரை ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க முற்பட்ட போது, கோபமடைந்த அவர், 'உங்களுக்கு மனித
தன்மையே இல்லையா? ஏன் இங்கு வந்து நிற்கிறீர்கள், இங்கிருந்து போய்விடுங்கள், என்ற தொணியில் பதில் அளித்ததாக நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆதரவாளர் நடிகை குஷ்புவிடம் இது பற்றி கேட்ட போதும், நான் கனிமொழுக்கு ஆதரவாகவே இங்கு வந்தேன். என்னால் இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. நான் அதிர்ச்சியில் இருக்கிறேன் என்றார்.

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை கேள்வியுற்ற அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் நீதிமன்றத்திலேயே அழுதார். நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றதும், கனிமொழிக்கு அருகில் வந்த திமுக பிரமுகர்கள், அவருக்கு ஆறுதல் கூறினர்.

ஏமாற்றமாக இருந்தாலும், புன்னகைத்தபடி ஏமாற்றத்தை மறைப்பதற்கு கனிமொழி முயற்சி செய்து கொண்டிருந்தார்.

கனிமொழியின் ஜாமின் மனுவை சிபிஐ எதிர்க்க போவதில்லை என கூறியிருப்பதாலும், அவர் ஒரு பெண் என்பதையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் கோரியிருந்தார். அதற்கு பதில் அளித்த சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி,

இவர்கள் மீதான குற்றச்சாட்டு கடுமையானவை என்பதால், ஆட்சேபணை இல்லை என்ற சிபிஐயின் நிலைப்பாடு, சட்டத்தின் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மேலும் கனிமொழியை பொருத்தவரை, அவர் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்தவர் என்பதாலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும் அவர் பெண் என்பதால் எந்த வகையிலும் பாரபட்சமாக நடத்தபப்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

மேலும், இத்தீர்பானது, முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையிலும், நீதியை மனதில் கொண்டும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எனவும், வெளியிலிருந்து வரும் செல்வாக்கு, ஏற்கனவே ஜாமீன் மனுக்கள் மீது பிறப்பிக்கபப்ட்ட உத்தரவுகள் உட்பட எந்தவித காரணங்களாலும் இந்த உத்தரவு வரவில்லை எனவும் தெரிவித்தார்.

அவவ்ர்கள் மீதான ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டதை அடுத்து, எதிர்வரும் 11 ம் திகதி இந்த வழக்கின் விசாரணை, தொடங்கும் எனவும் ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.
தரவு : பிபிசி, டைம்ஸ் ஆஃப் இந்தியா

0 கருத்துகள்: