தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.11

லிபியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் வரிசையில் நிற்கின்றன


கேணல் கடாபியின் ஆட்சி விழுந்த பின்னர் லிபியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் ஆளையாள் இடித்துக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. லிபியாவில் புதிய அரசு உருவாவதற்கு இடைஞ்சலாக நின்ற சீனா கூட இப்போது இடித்து முந்திக்கொண்டு களமிறங்கியுள்ளது. லிபியாவில் தொழில்களை ஆரம்பித்து பெரும் வருமானமீட்டலாம் என்ற ஆவல் உலக நிறுவனங்களிடையே
உயர்ந்துள்ளது. அழிந்து கிடக்கும் நாட்டில் வீதிகளை அமைத்தல், பாலங்கள், பாடசாலைகள், துறைமுகங்கள், வைத்தியசாலைகள், மின் இணைப்புக்கள், தொலைபேசி தொடர்பாடல்கள் போன்ற பல அபிவிருத்திகளை செய்ய வேண்டும். இதற்கான கொந்தராத்தை பெற இந்த நாடுகள் ஆவல் கொண்டுள்ளன. ஆனால் லிபியாவில் ஒரு புதிய அரசு அமைய குண்டு வீச்சுக்களை நடாத்திய புண்ணியவான்களான பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளுக்கே இந்த வேலைத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை கடாபி தான் நினைத்த நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளித்து தானும், தனது குடும்பத்தினரும் மட்டும் உலகப் பணக்காரர்களாக வாழ வழி செய்தார். இப்போது அவரை பதவி விலத்தியிருப்பது, சர்வதேச முதலாளித்துவ நாடுகளின் வர்த்தகத்திற்கான கதவு திறத்தலாக அமைந்துள்ளது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழிக்கு இது நல்ல உதாரணமாகும். ஜனநாயகம், மக்களாட்சி என்ற தலைப்புக்களுடன் நவகாலனித்துவம் தனது கச்சிதமான பயணத்தை ஆரம்பித்துவிட்டது.

0 கருத்துகள்: