தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.11

மொத்த கேள்விகளையும் கேட்டு முடிக்கும் வரை ஜெ.விடம் விசாரணை தொடரவேண்டும் : உச்சநீதிமன்றம்


பெங்களூரு நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும்
என கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஏற்கனவே கடந்த 20,21ம் திகதிகளில் ஆஜராகி நீதிபதியின் கேள்விக்கு பதில்
அளித்தார் ஜெயலலிதா.


இந்நிலையில், மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என தன்னை கட்டாயப்படுத்த முடியாது. தமிழக முதலமைச்சராக இருப்பதால் சென்னையில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஜெயலலிதா தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இன்று இம்மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் கல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோரின் அமர்வு, இம்மனுவை நிராகரித்தனர்.

எதிர்வரும் நவம்பர் 8ம் திகதி ஜெயலலிதா திட்டமிட்ட வகையில் ஆஜராக வேண்டும். ஒரே நாளில் விசாரணை முடியாவிட்டால் அடுத்தடுத்த நாட்களிலாவது விசாரணையை முடிக்க வேண்டும்.

எனினும் மொத்த கேள்விகளையும் அவரிடம் கேட்டு முடிக்கும் வரைக்கும் விசாரணையை தொடரவேண்டும். என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: