தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.11

வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்-நீதிபதி ராஜேந்திர சச்சார்


புதுடெல்லி:வகுப்பு வாத கலவரங்களை தடுக்கவும், குஜராத் மாதிரி இனப்படுகொலைகளை தடைச்செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ’சமூக கலவரங்களின் புதிய அலைகள்-காரணங்களும், தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.
நாட்டின் முக்கிய சிறுபான்மையினர் என்ற நிலையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு பரிகாரம் காணவேண்டியது நாட்டின் பொதுவான விருப்பமாகும். இச்சூழலிலிருந்து முஸ்லிம் சமூகத்தை விடுவிக்க கூட்டு முயற்சி தேவை.
வகுப்புவாத அழித்தொழிப்புகளை லட்சியமாக கொண்டு நடப்பவர்களை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படவேண்டும். மத்திய அரசு இம்முயற்சியிலிருந்து வாபஸ் வாங்கிவிடக்கூடாது. இவ்வாறு சச்சார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: