தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.11

துனிஷியா நாட்டு தேர்தலில் இஸ்லாமிய கட்சிக்கு மெஜாரிட்டி


ஆப்பிரிக்காவில் உள்ள துனிஷியாவில் தான் முதன் முதலாக சர்வாதிகாரிகளுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இதைத்தொடர்ந்து தான் எகிப்து, லிபியா, ஏமன், சிரியா ஆகிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டது. இந்த நாட்டில் 23 ஆண்டுகளாக பென் அலி ஆட்சி தான் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த புரட்சியில் இந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இப்போது தான் முதல் முறையாக அங்கு தேர்தல் நடந்தது.
217 உறுப்பினர் கொண்ட அரசியல் நிர்ணய சபைக்கு தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 75 லட்சம் வாக்காளர்களில் 41 லட்சம் பேர் ஓட்டுப்போட்டனர்.
இந்த தேர்தலில் இஸ்லாமிய கட்சி "இனாக்டா" வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிகிறது. இந்த கட்சி பென் அலி ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்டு இருந்தது. இதன் தலைவராக இருப்பவர் ரச்சித் கன்னோச்சி ஆவார்.

0 கருத்துகள்: