லிபிய முன்னாள் அதிபர் மௌமர்
கடாபியினதும், அவரது மகன் முட்டாஸிம்கடாபியினதும் பூதவுடல்கள், பாலைவன பகுதியின் இரகசிய இடமொன்றில் அடக்கம்செய்யப்பட்டிருப்பதாக லிபிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தேசிய இடைக்கால அரசு தெரிவிக்கையில், பெயர் குறிப்பிட முடியாத இடமொன்றில் இருவரது பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், லிபிய அரசை பொறுப்பேற்றுள்ள புதிய அரசு தலைவர்களுக்கு, இப்பூதவுடல்களை என்ன செய்வது என்பதில் நிலவிய குழப்பம் இதன் கடாபியின் உடல் அடக்கம் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளது.
எனினும், கடாபியின் சொந்த ஊரான 'சேர்த்' நகருக்கு வெளியே அவரது பூதவுடலை நல்லடக்கம் செய்ய வேண்டுமென கடாபியின் குடும்பத்தினர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மிஸராட்டா நகரிலிருந்து கிடைக்கப்பெற்ற இராணுவ தகவல்கள், இன்று அதிகாலை கடாபியின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. சில உறவினர்களும், சில அரசு அதிகாரிகளும், இச்சடங்கில் கலந்து கொண்டதாகவும், இஸ்லாமியமுறைபடி எளிய முறையில் கடாபியின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவுவரை மிஸாராட்டாவின் இறைச்சிக்கடையிலிருந்து வைக்கப்பட்டிருந்த இருவரதும் பூதவுடல்கள், அழுகும் நிலையில் காணப்பட்டதால் அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் இதையடுத்து இன்று அவை நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக