பாகிஸ்தான் மீது, எந்த நாடாவது போர் தொடுத்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக
களமிறங்குவோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் மீள் அழைக்கப்பட்டு வரும் நிலையிலும், ஆப்கானிஸ்தானின் மீள்
கட்டுமான பணிகளுக்காக இந்தியா பெரும் நிதி உதவி செய்து வரும் நிலையிலும், ஆப்கானிஸ்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் மீள் அழைக்கப்பட்டு வரும் நிலையிலும், ஆப்கானிஸ்தானின் மீள்
இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு இடையில் கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தினால், பாகிஸ்தானுடனான எங்களது உறவு எந்தவிதத்திலும் பாதிக்காது. அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ, அல்லது வேறு நாடோ பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் நாம் பாகிஸ்தானுக்கே ஆதரவளிப்போம். ஏனெனில் பாகிஸ்தான் எமது சகோதரன். 1979-1980 களில் ரஷ்யா எம்மை ஆக்கிரமித்த போது பாகிஸ்தானியர்கள் தான் எங்களுக்கு உணவு, உடை, உறையுள் என முழு அடைக்கலமும் கொடுத்தனர். அவர்களுக்கு நாம் ஒரு போதும் துரோகமிழைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைவீரர்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வரும், ஹக்கானி குழுவினரை கட்டுப்படுத்த கோரி பாகிஸ்தானிடம் அமெரிக்கா கோரியிருந்த போதும், அதற்கு பாகிஸ்தான் இராணுவ தளபதி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஹக்கானி குழுவினரை வேட்டையாடுவதற்காக பாகிஸ்தானில் மீண்டும் அத்து மீறி உள்நுழைய நேரிடும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
ஆனால், நீங்கள் நினைத்த நேரத்தில் உள் நுழைய இது ஈராக் அல்ல. நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு என்பதை அமெரிக்கா மறந்துவிட கூடாது. எந்த காரியத்தை செய்யும் முன் பலதடவை யோசித்து காலடி வையுங்கள் என பாகிஸ்தான் இராணுவ தளபதி மீண்டும் எச்சரித்திருந்தார்.
பாகிஸ்தான் உளவி அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பின்னணியிலேயே, ஹக்கானி குழுவினர் இயங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமெரிக்கா தனது இரானுவத்தை குவித்து வருவதும், பாகிஸ்தான் தனது எல்லைப்பகுதில் தானும் இராணுவத்தை குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக