ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது.
நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம்.
இந்நிலையில் சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சிலவற்றைக் காணலாம்.
உலகம் பூராகவும் சுமார் 366 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் தெரிவிக்கும் அதேவேளை 344 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது.
வருடாந்தம் 4.6 மில்லியன் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். அதாவது 7 செகண்டுக்கு ஒருவர் வீதம் இந் நோயினால் மரணிக்கின்றனர்.
வருடாந்தம் 465 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீரிழிவு நோய் எதிர்ப்புக்காக செலவழிக்கப்படுகின்றது., 2004 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 3.4 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் உயிரிழந்தனர்.
இந்நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில் 80% குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளிலேயே ஏற்படுகின்றது.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீதத்தினர் இதயம் சம்பந்தப்படட நோய்களாலும், பக்கவாதம் போன்ற நோய்களாலுமே இறப்பைத் தழுவ நேரிடுகின்றது.
நீரிழிவு நோயாளிகளில் 2 சதவீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னர் தமது பார்வையை இழப்பதுடன், 10 % பார்வைக் குறைபாடுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
நீரிழிவு நோயாளர்களில் 10 – 20 சதவீதமானவர்கள் சிறுநீரக கோளாறினால் இறக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக