உலகத்தின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவின் அடுத்த முடிக்குரிய இளவரசராக தற்போதைய உள்நாட்டு அமைச்சரும், அரச குடும்ப வாரீசுமான இளவரசர் நயீப் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22ம் திகதி அமெரிக்காவில் புற்று நோய் காரணமாக மரணமடைந்த 86 வயது சவுதி சுல்தானுடைய இடத்தில் 78 வயதுடைய நயீப் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது சவுதி மன்னராக இருக்கும் அப்துல்லா நோய்வாய்ப்பட்டுள்ளார்,
இவருடைய மரணத்தைத் தொடர்ந்து சவுதி மன்னர் பொறுப்பை இளவரசர் நயீப்பே ஏற்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தற்போதய உள்நாட்டு அமைச்சரான இவர் அப்பதவியை தொடர்ந்து வகிப்பதோடு உதவிப் பிரதமர் பதவியையும் வகிப்பார். இது ஒருபுறமிருக்க மறுபறும் சவுதி அரேபியாவின் ஜனநாயக மறுப்பு மன்னராட்சி பலத்த விமர்சனங்களை சந்தித்தபடி உள்ளது. இன்று வடக்கு ஆபிரிக்காவில் நடைபெறும் புரட்சிகள் ஒரு கட்டத்தில் சவுதிக்குள்ளும் நுழைந்துவிடலாம் என்ற அச்சத்தில் மன்னர் குடும்பத்தினர் பொது மக்களுக்கு சலுகைகளை அளவுக்கு அதிகமாக வழங்கியுள்ளனர். இருந்தாலும் மக்களுக்கு அதிக சலுகை வழங்கினால் ஒரு கட்டத்தில் புளித்து ஏப்பமாக மாற்றமடைய அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்பதும் தெரிந்ததே. பெண்ணடிமை, மத சர்வாதிகாரம் போன்ற பல்வேறு குறைபாடுகள் சவுதியில் இருப்பதாக மேலை நாடுகள் கூறுகின்றன. எவ்வாறாயினும் மேலை நாடுகளை சவுதி மன்னர் திருப்திப்படுத்துமளவுக்கும் அவர்களுடைய ஆட்சி பலமாகவே இருக்கும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக