கடாபி கொல்லப்பட்ட முறை கண்டிக்கத்தக்க செயல் என்று உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன. தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை தேசிய கொள்கை போலக் கொண்ட சிறீலங்கா அரசு கூட கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தது. இப்போது லிபியாவின் உயர்மட்ட அரச ஆயம் கடாபியை யார் சுட்டாரோ அந்த நபர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. மற்றய நாடுகள் போர்க் குற்றம் புரிந்தீர்கள் என்று எம்மீது குற்றம் சுமத்த முன்னர் போர்க்குற்றம் புரிந்த குற்றவாளியை நாமே நீதிமன்றில் நிறுத்தித் தண்டிக்கிறோம் என்று அறிவித்துள்ளது. இன்று வெளியாகியுள்ள இந்தப் பதில் சிறீலங்கா அரசுக்கு சவுக்கடி போல இறங்கியுள்ளது. வெள்ளைக் கொடி விவகாரத்திலும், இசைப்பிரியா போன்ற பெண்கள் பாலியல் கொலை செய்யப்பட்ட குற்றத்திலும் சுமார் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டியளவு தவறு செய்துள்ளார்கள். இவர்களை நீதி மன்றில் நிறுத்தி நாமே விசாரிக்கிறோம் என்று சிறீலங்கா இதுவரை அறிவிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் போர்க்குற்ற விசாரணையை சிறியளவு தவிர்த்திருக்கலாம். ஆனால் ஒரு சிங்களவரை தண்டித்தால் பௌத்த இனவாதம் ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்ற கருத்தால் இதுவரை கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களின் கொலைகளுக்கு பொறுப்பான சிங்களவர்கள் தண்டனை பெறவில்லை. தமிழர் சிங்களவர் என்ற பேதம் அவசியமில்லை யார் கொலை செய்தாலும் அவர்கள் குற்றவாளிகளே..! தண்டிக்கப்பட வேண்டியவர்களே..! என்ற சர்வதேச நியாயத்தை சிறீலங்கா இனியாவாது ஏற்று நடக்காவிட்டால் அது பாரிய நெருக்கடிகளை மேலை நாடுகளிடமிருந்து சந்திக்க நேரிடும். உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு படுகொலை ஆட்சி நடாத்த முடியாத நிலை பல ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்பட்டு வருகிறது. கடாபியை சுட்டவர் தண்டிக்கப்படுவார் என்ற உறுதியை லிபிய ஆட்சிப்பிரிவின் சார்பில் அப்டில் கபீஸ் கோகா மேலை நாடுகளுக்கு வழங்கினார்.
29.10.11
கடாபியை கொன்றவர் தண்டிக்கப்படுவார் சிறீலங்காவுக்கு சவுக்கடி !

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக