நேட்டோ விமானங்கள் லிபியாவில் நடாத்திய தாக்குதல்கள் சர்வதேச போர்க்குற்றங்களுக்கு இணையானவை என்று கடாபி குடும்பம் தெரிவித்துள்ளது. கடாபியின் மரணம் நேட்டோவின் தவறான இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் முன் வைக்க இருப்பதாக கடாபி குடும்பத்தின் சார்பில் வாதாடும் வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் கடாபி கொல்லப்பட்ட முறை ஒளிநாடாவாக வெளி வந்துள்ளது.
இவரை கொல்லும்படி கட்டளையிட்டவர் யார்..? சுடாதே சுடாதே என்று அவர் மண்டாட சுட்டுக் கொல்ல வேண்டிய தேவை என்ன வந்தது..? ஒருவர் போரில் சரணடைந்தால் அவர் இப்படியா கொல்லப்படுவது என்பவை சர்வதேச அரங்கில் இன்றுள்ள முக்கிய கேள்விகளாகும். கடாபி கொல்லப்பட்ட முறையும், சிறீலங்காவில் சரணடைந்த கேணல் ரமேஸ் கொல்லப்பட்ட முறையும் ஏறத்தாழ ஒரே மாதிரியே இருப்பதாக சென்றவார மனித உரிமைகள் அமைப்பு செய்திகள் தெரிவித்திருந்தன. இது இவ்விதமிருக்க கடாபியின் மகன் இப்போது நைஜீரியா நாட்டைக் கடந்து மாலி நாடு நோக்கி செல்வதாக போராளிகள் தரப்பு அறிவித்துள்ளது. கடாபியின் மகன் அல் இஸ்லாமும் உளவுப்பிரிவு தலைவரும் மாலிக்குள் நுழைந்துள்ளதாக கூறும் அவர்கள் இருவரும் தம்மிடம் சரணடைந்தால் கொல்லப்பட மாட்டார்கள் என்றும், சர்வதேச போர்க்குற்ற நீதி மன்றில் ஒப்படைக்கப்படுவர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக