தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.10.11

டேனிஸ் படைகள் லிபியாவில் இருந்து ஒரு வாரத்தில் வெளியேறும்

நேட்டோவின் வேண்டுதலை ஏற்று லிபியாவில் குண்டு வீசச் சென்ற டேனிஸ் விமானங்களும், விமானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் டென்மார்க் திரும்பிவிட வேண்டுமென டேனிஸ் படைத்துறை அமைச்சர் நிக் காக்கருப் தெரிவித்தார். முதலாவதாக விமானங்கள் டென்மார்க் நோக்கி பறப்பெடுக்க வேண்டும், அதைத் தொடர்ந்து மற்றயவர்கள் வந்து சேர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் சார்பில் குண்டு வீசும் பணிகளை முன்னெடுக்க 73 பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளார்கள். இவர்கள் அதி உயர் சம்பளத்தில் ஐந்த நட்சத்திர கோட்டலில் இருந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்ற ஆட்சியில் நேட்டோ கேட்டவுடன் டேனிஸ் படைகள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. நேட்டோ செயலராக பழைய வென்ஸ்ர பிரதமர் ஆனஸ் போ ராஸ்முசனே இருக்கிறார். அவருடைய முயற்சிக்கு பழைய வென்ஸ்ர அரசு துள்ளிக் கொண்டு அன்று வழங்கிய ஆதரவு போல புதிய அரசும் வழங்குமா என்பது கேள்விக்குறியே. நேட்டோ செயலர் உள்நாட்டில் தனக்கு ஆதரவு இல்லாத கட்சியை வைத்துக் கொண்டு வருங்காலத்தை எப்படி ஓட்டப்போகிறார் என்பது முக்கிய கேள்வியாகும். அதேவேளை நேட்டோ படைகள் லிபியாவில் வரும் டிசம்பர் 2012 வரை இருக்க வேண்டுமென்று லிபிய மேலதிக அரசு கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

0 கருத்துகள்: