ஊழல் எதிர்ப்பு வேடம்போடும் ஆர் எஸ் எஸ் - பாஜக கட்சியினரின் அடுத்த நகர்வு, 'மூன்றாம் திட்டமாக' அநேகமாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்தே அரங்கேறக்கூடும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார். "நாட்டில் சம்பவித்த பல பயங்கரவாதச் செயல்களின் பின்ணணியில் சங்பரிவாரங்களின் முகம் வெளிப்பட ஆரம்பித்ததும், அதை மறக்கடிக்க வேண்டியே இப்படி ஓர் ஊழல் எதிர்ப்பு நாடகம் ஆடப்படுகிறது" என்றார் திக்விஜய்சிங.
"வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது நான் மதிப்பு வைத்துள்ளேன், ம.பியில் முதல்வராக இருந்த பொழுது, அவருடைய ஒரு பயிற்சித் திட்டத்தையும் நான் சிறப்புற முடித்துள்ளேன், அதனால் சொல்கிறேன், ரவிசங்கர்ஜீ இந்த சதிவலையில் சிக்கிவிடக்கூடாது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி அவர் எழுதியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பிறகு விரிவாகப் பேசிய திக்விஜய்சிங், "அவர்களுடைய முதல், இரண்டாம் திட்டங்கள் (Plan A, & Plan B) சரிவர நிறைவே(ற்)ற இயலாமற் போனதால், ரவிசங்கர்பாபாவை வைத்து மூன்றாம் திட்டத்தை அவர்கள் ஏந்தக்கூடும்" என்று குறிப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் பிறகு விரிவாகப் பேசிய திக்விஜய்சிங், "அவர்களுடைய முதல், இரண்டாம் திட்டங்கள் (Plan A, & Plan B) சரிவர நிறைவே(ற்)ற இயலாமற் போனதால், ரவிசங்கர்பாபாவை வைத்து மூன்றாம் திட்டத்தை அவர்கள் ஏந்தக்கூடும்" என்று குறிப்பிட்டார்.
"மாலெகவ்ன், மொடாசா, அஜ்மீர்ஷரீஃப், ஹைதராபாத், சம்ஜொவ்தா எக்ஸ்பிரஸ் போன்ற பல இடங்களில் சம்பவித்த அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு சங்பரிவாரங்களே காரணம் என்பது வெளியுலகுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவந்துள்ள நிலையில், 'ஊழல் எதிர்ப்பு' என்ற போர்வையில் பாஜக திசைத்திருப்பலை செய்கிறது" என்ற திக்விஜய்சிங்குக்கு பாஜக மக்கள் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், "திக்விஜய்சிங் வெட்கமில்லாமல், ஊழல் எதிர்ப்பைப் பலவீனப்படுத்தப் பாடுபடுகிறார்" என்று பலவீனமாகப் பதிலளித்துள்ளார்
இதுபற்றி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் கேட்டபோது, "ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்லவும் எழுதவும் உரிமையிருக்கிறது, நான் எதற்கும் பதிலளிக்க மாட்டேன்" என்று பூடகமாக விடையிறுத்துள்ளார்.
"ஊழலுக்கு எதிராக எப்போதும் மன்மோகன்சிங் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்பதைக் குறிப்பிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர், "கூட்டணியில் உள்ளவர்கள் என்று கூட பாராமல் அரசு நடவடிக்கை எடுக்கிறது" என்றும் சொன்னார்.
"தகவல் பெறும் உரிமை, பணச் சுரண்டல் தடுப்பு மசோதா என்பன போன்ற பல நல்ல ஊழல் தடுப்பு முறைமைகளை சோனியா காந்தி தலைமையிலான கூட்டணி அரசு நடைமுறைப்படுத்துகிறது என்ற திக்விஜய் சிங் "இலஞ்சம் வாங்கிய எம்.பி திலீப்சிங் ஜுதேவ் கையும் களவுமாகக் காமிராக் கண்களில் சிக்கியும் ஏன் அவரை சிறைக்கு அனுப்பவில்லை? பாதுகாப்புத் துறையில் ஆயுத பேரத்தில் ஈடுபட்ட ஜெயா ஜேட்லியை தொலைக்காட்சி ஒன்று பொறிவைத்துப் பிடித்தும் பிஜேபி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? முன்னாள் பிஜேபி தலைவர் பங்காரு இலட்சுமணன் கையூட்டு வாங்கியது 'அப்பட்டமாக'த் தெரிந்தும் ஒரு வழக்குக் கூட பதிவு செய்யாதது ஏன்?" என்று சாடினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக