லிபியப் போர் முடிந்துவிட்டாலும் நேட்டோ படைகள் வரும் 2012ம் ஆண்டு முடியும்வரைதன்னும் லிபியாவில் நிலை கொள்ள வேண்டும் என்று லிபிய மேலதிக அரசின் தலைவர் முஸ்தாபா அப்டில் ஜலீல் நேற்று டோகாவில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து கோரிக்கை விடுத்துள்ளார். தமது நாட்டுக்கான ஆபத்து இன்னமும் குறைந்துவிடவில்லை என்று தெரிவித்த அவர் நேட்டோவைப் போலவே மற்றைய அயல் நாடுகளும் தமக்கு ஆதரவு தரவேண்டுமென கேட்டுள்ளார். இவர் இவ்வாறு வேண்டுதலைவிடுத்தாலும் நேட்டோ நாடுகள் பல லிபியாவில் இருந்து மூட்டைகட்ட ஆரம்பித்துவிட்டன. தொடர்ந்து இருப்பதால் ஏற்படும் செலவு அதிகமாக இருப்பதால் இந்த வெளியேற்றம் நடைபெறுகிறது. அப்டில் ஜலீலின் கருத்தை எவ்வளவு தூரம் நேட்டோ செவிமடுக்கும் என்பது கேள்விக்குறியே.
அதேவேளை லிபியாவை ஸாரியார் இஸ்லாமிய கடும் சட்டங்களைக் கொண்டு நிர்வாகிக்க விரும்புவதாக தெரிவித்த கருத்தை அப்டில் ஜலீல் குறைத்துள்ளார். டோகாவில் இக்கருத்தை மிகவும் அடக்கி வாசித்தார். அதேவேளை ஸாரியார் சட்டங்களில் சிறிய தளர்வை செய்து லிபியாவை நிர்வகிக்க வழியிருப்பதாக முன்னாள் டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் பியஸ் ரீ மூலர் தெரிவித்தார். இவருடைய கருத்தை டேனிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த சோன் எஸ்பர்சன் அடியோடு நிராகரித்தார். ஸாரியார் சட்டங்களை அறிந்த டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர் நாஸர் காடர் கூறும்போது மென்மையான ஸாரியார் சட்டங்கள் என்ற பேச்சே ஸாரியார் விதிகளில் கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் கொடிய சர்வாதிகாரியின், கடும் இஸ்லாமிய சட்டங்களில் வாழ்ந்த மக்களை உடனடியாக நவீன ஐரோப்பிய சமுதாயமாக்கிவிட முடியாது. அதற்கு சில காலம் எடுக்க வேண்டும். கடாபி கொல்லப்பட்டதும் முஸ்லீம்கள் நான்கு திருமணங்களை முடிக்கக்கூடியவாறு லிபிய ஆட்சி அமையும் என்று போராளிகள் தரப்புக் கூறி, கடாபி காலத்து வழமையகள் மாறாது என்று தெரிவித்து அங்குள்ளவர்களை குஷிப்படுத்தியதும் தெரிந்ததே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக