தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.10.11

எடியூரப்பா மீது மேலுமொரு ஊழல் குற்றச்சாட்டு


கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, புதிய ஊழல் புகார் எழுந்துள்ளது.
பத்ரா நீர்ப்பாசன திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்க எடியூரப்பா ரூ 13 கோடி லஞ்சம் வாங்கினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பொஸாருக்கு லோக் ஆயுக்தா
நீதிமன்ற நீதிபதி சுசீந்திர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் இந்த விசாரணையை நடத்தி முடிக்க 3 மாத கால அவகாசம் கேட்டுள்ள போதும், லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதி அதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விசாரணையை எதிர்வரும் நவம்பர் 26ம் திகதிக்குள் அறிக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி கேட்டுள்ளார்.

முன்னதாக, அரசு நிலங்கள் ஒதுக்கீடு மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஒதுக்கீட்டில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர், கடந்த ஜூலை 31ம் திகதி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி கைது செய்யப்பட்டு, பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,  அவருக்கு இரு வழக்குகளில் ஜாமீன் கிடைத்தது. மேலும் இரு வழக்குகளில் ஜாமீன் கிடைக்குமா என நாளை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: