இன்னமும் சில நாட்களில் அதாவது இந்த அக்.31 ம் திகதிக்குள் உலக
சனத்தொகை 7 பில்லியனை கடந்து விடும் என ஐ.நா புதிய தகவல் ஒன்றை நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. சனத்தொகை பரம்பல் வீதத்தில் இந்த புதிய மைல் கல் இம்மாதம் (அக்.31) நிலைநாட்டப்படலாம் என ஐ.நா கணிப்பிட்டுள்ளது.
உலக சனத்தொகையின் அபரிதமான
இந்த வளர்ச்சி வீதத்தில்,
எமது உலகமானது, நிலையான நகரங்கள், பொருளாதார வளர்ச்சி, எரிபொருள் உற்பத்தி, தொழிலாளர் படைகள், பொருளாதார மற்றும் சமூக நலன்களில் பங்களிப்பு செலுத்தும் இளந்தலைமுறையினர், ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களில் இன்னமும் நாட்டம் கொண்டிருக்கிற வயோதிப தலைமுறையினர் என பலவற்றை வெற்றிகரமாக கொண்டிருக்க முடியும் எனவும், அதற்குரிய சரியான திட்டங்களை தீட்டவேண்டிய நேரமிது எனவும் ஐ.நாவின் UNFPA (ஐ.நா மக்கள் தொகை நிதியம்) அறிவித்துள்ளது.
ஐ.நா அறிவித்துள்ள சனத்தொகை கணிப்பீடு பற்றிய புதிய புள்ளிவிபரத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில சுவாரஷ்யமான தகவல்கள்
- 2050 இல் உலகின் சனத்தொகை 9.3 பில்லியனாக இருக்கும், இந்த நூற்றாண்டு முடிவடைவதற்குள் 10 பில்லியனை தாண்டிவிடும்.
- சில வேளைகளில் இந்த எண்ணிக்கை 2050 இல் 10.6 பில்லியனாகவும், 2100 ம் ஆண்டில் 15 பில்லியனாகவும் உயர்வடையலாம்.
- ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் வேகமாக சனத்தொகை உயர்வடைந்து வருகிறது.
- அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் கைத்தொழில் நாடுகள் சனத்தொகை வளர்ச்சியால் பாரிய நிதி தட்டுபாடு ஆபத்தை எதிர்கொள்ளலாம்.
- ஏழை - பணக்காரர் வித்தியாசம் எல்லா இடத்திலும் தொணிக்க ஆரம்பிக்கும். வேலையில்லாதோர் பலர் அகதிகளாக இடம்பெயர கூடும்.
- 1927ம் ஆண்டு உலக சனத்தொகை 2 பில்லியனாக இருந்தது. ஒரு நூற்றாண்டுக்குள் இது 7 பில்லியனாக உயர்வடைந்துள்ளது மாபெரும் உயர்வு வீதமாகும்.
- 13 வருடங்களுக்கு முன்பு அதாவது 1998ம் ஆண்டு தான் உலக சனத்தொகை 6 பில்லியனை எட்டியிருந்ததாக ஐ.நா அறிவித்திருந்தது.
- தற்போதைய உலக சனத்தொகையில் 43% வீதமானோர், 25 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்.
- உலகின் அரைவாசிக்கு மேற்பட்ட சனத்தொகையினர் நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள். இன்னமும் 35 வருடங்களில் 2/3 பகுதியினர் நகர்ப்புறங்களில் வாழக்கூடும்.
- 1960 ம் ஆண்டுகளில் குழந்தை பெற்றுக்கொண்டதை விட, தற்போது குறைவான குழந்தைகளையே பெண்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- இன்றைய உலகில் 893 மில்லியன் மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2050 இல் இது 2.4 பில்லியனாக உயர்வடைய கூடும்.
- இந்த நூற்றாண்டின் அதிக சனத்தொகை கொண்ட கண்டமாக ஆசியா பதிவாகியுள்ளது. எனினும் ஆபிரிக்கா மிக வேகமாக சனத்தொகை வளர்ச்சி காண்கிறது.
- ஆச்சரியமான தகவல் :
- உலக சனத்தொகை 7 பில்லியனாக மாறவுள்ள நிலையிலும், அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய மூன்று கண்டங்களிலும் வாழும் மொத்த மக்கள் சனத்தொகை வெறும் 1.7 பில்லியன் தான். 2060 இல் வெறும் 2 பில்லியனாக தான் அவை உயர்வடைய கூடும்.
- காரணம், இக்கண்டங்களில் உள்ள நாடுகளில், சனத்தொகை வளர்ச்சி வீதம் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துவிட்டது.
தரவு ; CNN,
தமிழாக்கம் : ஸாரா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக